பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

ஜூன் 18, 2021

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர் வரும் 21ஆம் திகதி அதிகாலை 4.00. மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து ஜூன் 23ம் திகதி இரவு 10.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரவுள்ளது.

எவ்வாறெனினும் மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயணத்தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.