கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் ஜென் இசட் எனும் முதல் மாணவர் பிரிவாக செயல்படும்
ஜூன் 20, 2021இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் 45 வது ஆண்டுவிழாவையொட்டி “ஜென் இசட்” எனும் இணையவழி கருத்தரங்கு இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் முதல் மாணவர் பிரிவாக ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி பீடத்தில் இன்று (மே,20) இடம்பெற்றது.
இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் இளமானி பிரிவின் “ஜென் இசட்” பிரிவு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மினி கம்ப்யூட்டர் சொசைட்டியாக செயல்படவுள்ளது. இதற்கமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி பீடம் இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் முதல் மாணவர் பிரிவாகும்.
இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் மாணவர் அத்தியாயத்தின் தலைவர் திரு.ரணசிங்க மற்றும் குழு உறுப்பினர் எம்.எஸ். ஹிருணி ராஜபக்ஷ ஆகியோர் மாணவர் அத்தியாயத்தின் குறிக்கோள்களையும் ஆண்டின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக விளக்கமளித்ததாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு உரை தென்கிழக்கு ஆசிய பிராந்திய கணினி கூட்டமைப்பு நிர்வாக பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. நிக்கோலஸ் டேட் நிகழ்த்தப்பட்டதுடன் கணனி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி, அசேல குணசேகர வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கையில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான பங்கேற்பாளர்கள், இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் மாணவர் பிரிவு பொறுப்பதிகாரி கலாநிதி நிரோஷா வெதசிங்க மற்றும் மாணவர் பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டி என்பது இலங்கையில் உள்ள பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக சமூகத்தின் உறுப்பினர்களுக்கான உயர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.