சிலாபம் கடற்பரப்பில் 23 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூன் 20, 2021

சிலாபம் முக்கு தொடுவாவ கடற்பரப்பில் மிதந்த நிலையில் காணப்பட்ட 23.1 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் இன்று (ஜூன், 20) கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு சூட்சமமான முறையில் 10 சாக்கு பொதிகளில் மிதக்கவிடப்பட்ட கஞ்சா கடற்படையின் வடகிழக்கு பிராந்திய கட்டளையகத்தினால் கைப்பற்றப்பட்டது.

இதற்கமைய சிலாபம் கடற்பரப்பில் 18,19 மற்றும் 20ம் திகதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 308 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பில் சிலாபம் பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.