பிரேசில் பிரதித் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு

ஜூன் 21, 2021

தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த பிரேசில் குடியரசின் இலங்கைக்கான பிரசில் குடியரசின் பிரதி தூதுவர் வின்ஸ்டன் அலெக்சாண்டர் சில்வா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் (ஓய்வு) தனது பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தனது பதவி காலத்தில் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பிரேசில் பிரதித் தூதுவர் தனது நன்றியினை தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் ஊழியர்களுக்கு பிரேசில் தூதரகத்தினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்காக வெளியேறும் பிரதி தூதுவருக்கு ஜெனரல் குணரத்ன தனது நன்றியை தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கிடையில் தற்போது நிலவும் உறவுகளை மேலும் வலுப்படுத்த வழிவகுத்த பிரதி தூதுவரின் உதவியை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கையில் உள்ள போட்ஸ்வானா குடியரசின் கெளரவ தூதுவர் ஜெயசிரி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.