படையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட வசதிகள் விரிவாக்கம்

ஜூன் 22, 2021

கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொவிட்- 19 தொற்றை கண்டறிவதற்கான ஆய்வுக்கூடத்தை புதுபிக்கும்மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த திட்டத்திற்கு 231வது பிரிகேட் படையினர் தங்களது உதவிகளை வழங்கினர்.

போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி கே.கணேசலிங்கம் மற்றும் நுண்ணுயிரியலாளர் வைத்தியர் தேவகாந்தன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க படையினரால் மேற்படி பணிகள் குறுகிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.