கிளிநொச்சியில் உள்ள படைவீரர்களினால் சமூக நலத்திட்டங்கள் பல முன்னெடுப்பு

மார்ச் 21, 2019

கிளிநொச்சி மருத்துவமனையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கிளிநொச்சியில் உள்ள படைவீரர்கள் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இரத்தம் வழங்குவதற்கு முன்வந்தனர். கடந்த திங்கட்கிழமையன்று (மார்ச் ,18) மாங்குளம் வைத்தியசாலையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் சுமார் 85 க்கும் மேற்பட்ட படைவீரர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர். 

இதேவேளை, கிளிநொச்சியில் உள்ள படைவீரர்கள் குழு ஒன்று பாளை நகர் தமிழ் அழகன் முன்பள்ளி நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் முன்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய முன்வந்தனர். இந்நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகர அவர்களின் வழிகாட்டலுடன் இடம்பெற்றது.

பொதுமக்களுக்கும் படையினருக்கும் உள்ள நல்லெண்ணம் மற்றும் சகவாழ்வினை வலுப்படுத்தும் வகையில் இதுபோன்ற பல சமூக நலத்திட்டங்கள் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.