நல்லூரில் 80 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது

ஜூன் 26, 2021

நல்லூர் சீதா குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது 80 கிலோ கிராம் அதற்கு மேற்பட்ட கேரள கஞ்சா இராணுவத்தினரால் நேற்றைய தினம் (ஜூன்,25) கைப்பற்றப்பட்டது.

66வது பிரிவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் 20வது இலேசாயுத படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களினால் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தபட்ட படகு, பொலெரோ கேப் மற்றும் சட்டவிரோத மதுபானம் நிரப்பப்பட்ட கேன் ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்ற பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

Tamil