கடற்படை கூட்டுப்பயிற்சியின் கடல் சார் பயிற்சிகள் திருகோணமலையில் ஆரம்பம்

ஜூன் 28, 2021

இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி”   நடைவடிக்கையின் இரண்டாவது கட்டம் திருகோணமலை கடற்பரப்பில் ஜூன் 26ம் திகதி ஆரம்பமானதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பல்களான சயுரல, கஜபாஹு, ஆகிய கப்பல்களும்  இலங்கை விமானப்படையின் பெல் 212, 412 ரக ஹெலிகொப்டர்கள், B 200 ரக பீச் கிராப்ட் விமானம், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பல் என்பன பங்கு கொள்வதா கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த கூட்டுப் பயிற்சியில் வான் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கவின் 7வது கடற்படை குழுமத்துக்கு சொந்தமான பி-8 பொசிடன் போயிங் ரக கடல் சார் ரோந்து விமானம் மற்றும் எஸ்எச்-60 ரக  ஹெலிகொப்டர் என ஆகியன பங்கு கொள்வதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பிராந்திய தந்திரோபாயங்கள்  மற்றும் இராக்கால தொடர் பயிற்சிகளின் போதான கடல் அணுகுமுறைகளும் சோதனை நடவடிக்கைகள் என்பன ஜூன் 26ம் திகதி இடம்பெற்ற அதேவேளை நாளை (ஜூன் 27)  இடைவெட்டு பயிற்சிகள்  மற்றும் இடைமறிப்பு பயிற்சிகள்  தொடர்பான கூட்டு பயிற்சிகள் செயல்படுத்தப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் தரையிறங்குவது தொடர்பான பயிற்சிகளில் சார்ள்ள்டன்  அமெரிக்க கடற்படைக் கப்பலின் எம்எச் 60 எஸ் ஹெலிகொப்டர் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் என்பன கஜபாகுகடற்படைக் கப்பலில் தரையிறங்க உள்ள அதேவேளை, அமெரிக்க கடற்படை கப்பலின் எம்எச் 60s ஹெலிகொப்டர்  விமானப்படையின் பெல் 412 ஹெலிகொப்டர் என்பன சுயுரல கடற்படை  கப்பலில் குறுக்கு தரையிறக்கம் செய்யப்பட உள்ளன.

இதேவேளை இந்த கூட்டுப் பயிற்சியின் அடுத்தகட்டமாக தடங்களை கண்டறியும் பயிற்சி நடவடிக்கை நாளை தொடர உள்ளது. இதில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கப்பல்கள் ஆன ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சயுரல மற்றும் கஜபாகு என்பனவும் இலங்கை விமானப்படையின் B 200 ரக பீச் கிராப்ட் விமானமும், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பலும்  பி-8 பொசிடன் போயிங்  கடல் சார் ரோந்து விமானமும் ஜப்பான் கடற்படையின் ஜேடிஎஸ் யூகிரி நாசகாரி கப்பலும்  எம் எச் -60ஆர்  ஹெலிகொப்டரும் பங்குபற்றும் என எதிர்பார்க்க கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

பல் தரப்பு கடற் படைகளின் இந்த கூட்டுப்பயிற்சி, இலங்கை கடற்படையின்  எதிர்கால நடவடிக்கைகளில் பயனளிக்கத்தக்க  நவீன அறிவு, தந்திரோபாயங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கவுள்ளன.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த பல பரபரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி,  சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றதாக  கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.