கொவிட் தடுப்பு இயக்கத்திற்கான மருத்துவ சாதனங்களை தர்ம விஜய அறக்கட்டளை பரிசளிப்பு
ஜூலை 02, 2021அமெரிக்காவை தளமாகக் கொண்ட தர்ம விஜய அறக்கட்டளை மற்றும் பெளத்த விஹாரை ஆகியன இணைந்து கொவிட் -19 கட்டுப்பாட்டு பணிகளுக்காக இலங்கைக்கு நேற்று (ஜூலை 01) ஒரு தொகை மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த அமைப்பின் ஸ்தாபகரும் அமெரிக்காவின் சங்க நாயக்க தலைவருமான வண. டாக்டர் வல்பொல பியானந்த நாயகே தேரர், கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினை இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த நன்கொடை பொருட்களை வழங்கி வைத்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய , பிபி / எச்ஆர் துடிப்புக்களை கண்டறியும் டெலிமெட்ரி திறைகள், ஒக்ஸிஜன் கொள்கலன்கள், 10 எல்டிஆர் ஒக்ஸிஜன் செறிவூட்டிகள், துடிப்பு ஒக்ஸிமீட்டர்கள், 20,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் என்பன நாடு முழுவதும் உள்ள 12 வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.