இராணுவத்தினரால் சமூக தடுப்பூசி நிலையங்கள் அமைப்பு
ஜூலை 05, 2021ஜனாதிபதியின் பணிப்புரையை அடுத்து இன்று (ஜூலை 5) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுவதற்காக மேற்கு மாகாணத்தில் புதிய சமூக தடுப்பூசி நிலையங்களையும், மாவட்ட அடிப்படையிலான நிலையங்களையும் இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
அதன்படி, மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மேற்கு மாகாணத்தில் தங்களின் நிரந்தர வதிவிடத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பதன் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களில் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற வசதி செய்யப்படுவார்கள்:
• நாரஹம்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை
• பத்தரமுல்லை தியத உயன
• பனாகொடை ஸ்ரீ போதிராஜராமைய (இராணுவ விஹாரை)
• வேரஹரவில் அமைந்துள்ள 1வது இராணுவ வைத்திய படையணி தலைமையகம்
தேசிய அடையாள அட்டையுடன் மின்சாரம் அல்லது தொலைபேசி பட்டியல் அல்லது தேர்தல் பட்டியலின் நகலை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, இல்லையெனில் தடுப்பூசி பெற கிராம சேவகரினால் வழங்கப்படும் வதிவிடச் சான்றிதழ் சமர்பிக்கப்படவேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் பொதுமக்கள் தடுப்பூசி வசதிகளைப் பெற்றுக்கொள்ள நாடு முழுவதும் புதிய ‘வாக் இன்’ சமூக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்படும் என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல் மேற்கூறிய நேரத்தின்போது தடுப்பூசி பெறுவதற்காக வதிவிடச் சான்றிதழை சமர்ப்பித்து இராணுவத்தினரின் பின்வரும் சமூக தடுப்பூசி நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் :
• காலி மாவட்டம் |
- |
காலி வித்யாலோக வித்தியாலயம் |
• மாத்தறை மாவட்டம் |
- |
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம் |
• பதுள்ளை மாவட்டம் |
- |
தியதலாவை பாதுகாப்பு படை தலைமையகம் |
• அனுராதபுர மாவட்டம் |
- |
அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலை |
• பொலன்னறுவை மாவட்டம் |
- |
மின்னேரியா காலாட்படை பயிற்சிப் பாடசாலை |
• கிளிநொச்சி மாவட்டம் |
- |
இராணுவ ஆதார வைத்தியசாலை |
• முல்லைத்தீவு மாவட்டம் |
- |
முல்லைத்தீவு தமிழ் கல்லூரி, புதுக்குடியிருப்பு |
• மன்னார் மாவட்டம் |
- |
மன்னார் முதலீட்டு சபை கட்டிடம் |
இது தவிர, கடற்படை சைனோபார்ம் தடுப்பூசியை சைத்திய வீதியில் உள்ள லைட்ஹவுஸ் பகுதி, கொழும்பு மற்றும் ராகம எலபிட்டிவெல சந்திரவன்ஷா வித்யாலயம் ஆகிய இடங்களில் இன்று முதல் ஆரம்பிக்கின்றது.