பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டும் கடல் சார் கடற்படையின் பயிற்சிநெறி

ஜூலை 08, 2021

பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டுதல் எனும் கடற்படையின் பயிற்சிநெறி, சிறப்பு படகுப் பிரிவு தலைமையத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன முன்னிலையில் அங்குராப்பனம் செய்துவைக்கப்பட்டது.

உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் நிதியுதவியுடன் இந்த முழுமையான பயிற்சி மாதிரி தயாரிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடல்சார் சட்ட அமலாக்க அதிகாரிகளிடமிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களுக்காக சிறப்பு படகுப் பிரிவு நடத்திய வருகை, வாரியம், தேடல் மற்றும் பறிமுதல் பயிற்சிகளை மேம்பட்ட தரங்களுடன் மேற்கொள்ள பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டுதல் எனும் கடற்படையின் பயிற்சிநெறி வசதி செய்யும்.

பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டுதல் பயிற்சிநெறியின் எண்ணக்கருவினை செய்முறை ரீதியாக சிறப்பு படகுப் பிரிவினரால் செய்துகாட்டப்பட்டது.

இந்த பயிற்சி நெறி கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கடற்படையின் பிரதி கடற்படை பிரதானியும் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளையகத்தின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் வைஎன் ஜயரத்ன, ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான அலுவலக உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்ட தலைவர் அவன் கோல், உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்தின் தொழிலுட்ப திட்ட நிபுணர் ஜேரைன் ரொபர்ட்ஸ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், சிறப்பு படகுப் பிரிவு வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.