யாழில் டெங்கு பரவலை தடுக்க இராணுவத்தினரினால் மதஸ்தானங்கள் சுத்தம் செய்யப்பட்டன

ஜூலை 10, 2021

யாழ் தீபகற்பத்தில் டெங்கு நுளம்பு பரவும் என இனங்காணப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய யாழில் மத ஸ்தானங்களை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு படையினர் மேற்கொண்டனர்'

அதன்படி, பெரியவிலனில் உள்ள புனித ஜோன்ஸ் பாப்டிஸ்ட் தேவாலயம் மற்றும் புனித அந்தோணியார் தேவாலயம், கந்தரோடை அருள்மிகு அலுரனநாதன் பிள்ளையார் கோவில், அலவெட்டி அலகொல்லை பிள்ளையார்  கோவில் மற்றும் காரைநகர் சிவன் கோவில் வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதான நிகழ்வில் 10வது பீரங்கி படையணி, 11வது இலேசாயுத படையணி, 9வது இலேசாயுத படையணி, மற்றும் 16வது கெமுனு வோச் படையணி ஆகிய படையணிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.