கிருஷ்ணபுரத்தில்தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு

ஜூலை 10, 2021

கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின்  நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. சசிதரன் சுதர்ஷினியின்  குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம், அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளையில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டதாக  இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டு பாவனைப்பொருட்கள், உபகரணங்கள், உலர் உணவுப்பொதிகள், புதிய காய்கறிகள் மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டிற்கான காகிதாதிகள், பொதிகள் ஆகியவையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

புதுமனை குடிபுகு விழாவில் சிரேஷ்ட இராணுவ சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள், கிராம சேவகர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.