யாழில் இராணுவத்தினரால் 700க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் நடுகை

ஜூலை 11, 2021

யாழில் மத ஸ்தலங்கள், அரச காணிகள், இராணுவ முகாம்கள், தரிசு நிலங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலம் என்பவற்றில் சுமார் 700க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை யாழ் பாதுகாப்பு படைக் கட்டளையகம் நேற்று (ஜூலை, 10) நடுகை செய்தது.

யாழ்ப்பாணத்தின் எதிர்கால தலைமுறையின் நலனுக்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தை மதகுருக்களின் ஆசீர்வாதத்துடன், யாழ் பாதுகாப்பு படைகள் கட்டளைக் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தொடங்கியதாக என இராணுவம் தெரிவித்துள்ளது.

தேங்காய், கிதுல், பனை மற்றும் இரப்பர் உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் அதனுடன்தொடர்புடைய தொழில்துறை தயாரிப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சர் கெளரவ அருந்திகா பெர்னாண்டோ தேங்காய் மரக்கன்றுகளை வழங்கியதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

.சுகாதார வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள்,சிரேஷ்ட அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.