2360 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூலை 12, 2021

மன்னார் வங்காலை கடற்கரையில் நேற்றைய தினம் சுமார் 2 ஆயிரத்து 360 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

வங்காலை கரையோர பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 60  சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.

சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களின் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் காரணமாக  கடத்தல்காரர்கள் வங்காலை கடற்கரையில் குறித்த தொகுதி  மஞ்சளினை விட்டுச்  சென்றுள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்  வரை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.