கின் கங்கையில் உள்ள குப்பை கூளங்கள் அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படையினர்
ஜூலை 12, 2021கின் கங்கை அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களின் கீழ் நீர் வழிப்பாதையை தடை செய்யும் வகையில் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் கடற்படை வீரர்களினால் அகற்றப்பட்டது.
கங்கையில் சாதாரணமாக பாயும் நீரினால் காவிச் செல்லப்படும் குப்பை கூளங்கள் இந்த பாலங்களின் கீழ் தேக்கம் அடைகின்றன. இதனால் கின் கங்கையின் நீரோட்டம் தடைப்பட்டு அது சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்கின்றது.
எனவே, உடனடி நடவடிக்கைகளைத் தொடங்கிய தெற்கு கடற்படை கட்டளையக சுழியோடி குழுக்கள், பாலங்களின் அடியில் தேங்கிய முற்றுகைகளை அகற்றியது.
வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொடவில் அமைந்துள்ள சிறு பாலங்களுக்கு அடியில் சிக்கியுள்ள குப்பை கூலங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் என்பனவற்றை அகற்றி நீரோட்டத்தின் இயல்புநிலைக்கு கொண்டு வந்து கடலில் சங்கமமாக வழிவகுத்தனர்.