கஞ்சா செய்கை இராணுவத்தினரால் அழித்தொழிப்பு

ஜூலை 12, 2021

மொனராகலை, கெபிலித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை, மத்திய பாதுகாப்புபடை தலைமையகத்தின் கீழ் உள்ள 18வது கெமுனு வோச் படைவீரர்களினால் சுற்றிவளைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது.

காடுகளுக்குள் சட்சமமான முறையில் ஏறத்தாள ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இரகசியமாக செய்கை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை பிடுங்கி எடுத்ததுடன் சுமார் 200 கிலோ எடையுள்ள கஞ்சாவுடன் அவற்றை அழித்ததாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊர்காவற்துறை, அல்லைபிட்டி பகுதியில் 51வது பிரிவின் புலனாய்வுப் படையினரும், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 17வது கெமுனு வோச் படைவீரர்களும் பொலிஸாருடன் இனைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் சுமார் 6.5 கிலோ கேரள கஞ்சாவை கொண்டு சென்ற பொதுமகன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பன மேலதிக சட்டம் நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.