சிவில் பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 13, 2021

சிவில் பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஜூலை, 13)சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்தினை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன் அவரது நியமனத்திற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்று சினேக பூர்வ கலந்துரையாடலின்போது சிவில் பாதுகாப்பு படை எதிர்கால திட்டங்கள் மற்றும் அதன் வளர்ச்சிப்படிகள் தொடர்பாக சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பு கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.