விஹார மகா தேவி பூங்காவில் புதிய தடுப்பூசி நிலையம் ஸ்தாபிப்பு
ஜூலை 15, 2021மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதனை இலகுவாக்கும் வகையில் இன்று (ஜூலை, 15) முதல் கொழும்பு விஹார மகா தேவி பூங்கா திறந்த வெளியரங்கில் புதிய தடுப்பூசி நிலையம் ஒன்று இராணுவத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் தேசிய அடையாள அட்டையுடன் மின்சாரம் கட்டண பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண பட்டியல் அல்லது தேர்தல் இடாப்பின் பிரதி அல்லது கிராம சேவகரிடமிருந்து பெறப்படும் வதிவிடச் சான்றிதழ் என்பவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை காலை 8.30 மணி முதல் - மாலை 4.30 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
வேரஹெரவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அதேவேளை, பத்தரமுல்ல ‘தியத உயன’ தடுப்பூசி ஏற்றும் நிலையத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் ஜூலை 19ம் திகதி வரை மட்டுமே இடம்பெற உள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.