உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இலங்கையில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைக்கு பாராட்டு

ஜூலை 16, 2021

இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் நேற்று (ஜூலை 15) விஹார மஹா தேவி பூங்காவில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு வருகை தந்தார்.

இலங்கையின் தேசிய தடுப்பூசி வழங்கலில் ஒருங்கிணைந்த பகுதியாக இராணுவம், ஜனாதிபதியின் தடுப்பூசி திட்டத்தை பூர்த்தி செய்ய குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள், நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு திட்டங்கள் ஆகியவற்றையும் வைத்தியர். சிங் உன்னிப்பாக கண்காணித்ததாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் பிரதி இராணுவ அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மடோலா, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், சுகாதார அமைச்சின் மருத்துவப் பிரதிநிதி மற்றும் கொழும்பில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.