வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு
ஜூலை 16, 2021வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் ஜூலை 13 முதல் 15 வரை இடம்பெற்றது, நேற்றைய தின (ஜூலை 15) நிகழ்வினை குறிக்கும் வகையில் திரைநீக்கம் செய்யப்பட்டது.
கடற்படை அதிகாரிகளின் பிரதி பிரதானியும் தற்போதையவட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் தலைவருமான ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தொடர்தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமாரி முகவர் நிலையம், கடற்படையின்தேசிய நீரியல் அலுவலகத்தில் இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த இணையவழி மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிக ஊடுருவலில் இருந்தான பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான பொதுவான தரங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக கலந்துறையாடப்பட்டன.
இந்த மூன்று நாள் நிகழ்வுகளில் உறுப்பினர் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பங்கேற்பாளர்கள், வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் துணை உறுப்பினர்கள் மற்றும் கண்கானிப்பு நாடுகள், சம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
2002ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவானது பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து என்பன 13 வது பிராந்திய நீரியல் ஆணைக்குழுவின் ஆரம்ப உறுப்பினர்களாகவும், 03 இணை உறுப்பினர் நாடுகளிலும் 03 கண்காணிப்பு நாடுகளையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.