இராணுவம் பொது விற்பனைக்கு 1 மெட்ரிக் டன் உலர்ந்த மிளகாய்களை உற்பத்தி செய்தது
ஜூலை 17, 2021இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகம், கந்தகாடு, மெனிக் பார்ம் மற்றும் ஆண்டியாபுளியங்குளம் இராணுவம் பண்ணைகளில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கைபண்ணப்பட்ட காய்ந்த மிளகாய் வைபவ நீதியாக சிறு பயிர்செய்கை இராஜாங்க அமைச்சிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
இதற்காக குறித்த அமைச்சினால் தேவையான நிலம், விதைகள் மற்றும் பழங்கள், உரம் மற்றும் நாற்றுமேடை உற்பத்தி செய்வதற்காக, இராணுவத்திற்கு 79 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்தது.
குறித்த அறுவடையின் 1 முதல் பகுதி, கரும்பு, சோளம், முந்திரி, மிளகு, இலவங்கப்பட்டை, கராம்பு, வெற்றிலையுடன் தொடர்புடைய கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட சிறு தானிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெளரவ. ஜனக வக்கும்புறவிடம் ஒரு கிலோ மிளகாய் 300 ரூபாய் வீதம் வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
'சதொச' மற்றும் கூட்டுறவு மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விநியோகத்திற்காக அரச ஸ்தாபனங்ளுக்கு
இவை விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள்,
இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணிப்பாளர் பிரிகேடியர் ஆரோஷ் ராஜபக்ஷ, அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.