கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யும் பல நாள் மீன்பிடி கப்பல் கண்காணிப்பு அமைப்பு
ஜூலை 17, 2021கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யக்கூடிய வகையில் பல நாள் மீன்பிடி கப்பல்களினை கண்காணிப்பு பொறி முறைக்கு பங்களிப்பு செய்யும் கண்காணிப்பு அமைப்பினை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியின் இலங்கை பெற்றுக்கொபல நாள் மீன்பிடி கப்பல்களினை கண்காணிப்பு பொறி முறைக்கு பங்களிப்பு செய்யும் கண்காணிப்பு அமைப்பினை ள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு அமைப்பு, சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்தல், இந்து சமுத்திரத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை தடுக்க உதவுவதுடன் ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பற்ற கப்பல்களில் மீனவர்களை மீட்டல் என்பவற்றிற்கு உதவியாக அமையும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி கூறினார்
4,200 டிரான்ஸ்பொண்டர்கள் கொண்ட இந்த கண்காணிப்பு அமைப்பு, ஒரு கண்காணிப்பு மையம் மற்றும் செயற்கைக்கோள் வசதிகளுக்கான உபகரணங்கள் ஆகியவற்றின் பெறுமதி சுமார் 5.38 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மையம் , கடற்றொழில் மற்றும் நீர் வள திணைக்களத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது.
முதற் தொகுதி ட்ரான்ஸ்பொன்டர்கள் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில் சம்பிரதாய பூர்வமாக நேற்று (ஜூலை, 16) கையளிக்கப்ட்டது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான கண்காணிப்பு முறையின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்புக்காக அவுஸ்திரேலியஅரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.