காயமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

ஜூலை 19, 2021

பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் காயமுற்றதன் காரணமாக கடற்படையினரால் நேற்றையதினம் (ஜூலை, 18) கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

காயமடைந்த மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்த மீன்பிடி படகு நங்கூரமிட்டிருந்த இடத்திற்கு வருகை தந்த இலங்கை கடற்படைக் கப்பல் 'சயுரல' குறித்த காயமுற்ற மீனவரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீன்பிடி படகு நாட்டின் தென்கிழக்கே கிரேட் பாஸ் கலங்கரை விளக்கத்திலிருந்து 610 கடல் மைல் (1129 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் இதன்போதே குறித்த மீனவர் பலத்த காயத்திற்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறன்றது.