கொரிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 22, 2021

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு வூன்ஜின் ஜியோங்;, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) காலை (ஜூலை 22) சந்தித்தார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டே, பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு முதற்தடவையாக வருகை தந்த கொரிய குடியரசின் தூதுவரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.

மரியாதை பூர்வமான வரவேற்பைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு செயலாளர் தென் கொரிய தூதுவருடன் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர விடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற சினேகபூர்வ கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடு தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டன.

இரு நாடுகளிலும் உள்ள கொவிட் -19 நிலவரங்கள் தொடர்பாகவும்  பாதுகாப்பு செயலாளர் மற்றும் தென் கொரிய தூதுவர் ஆகியோருக்கிடையில் கலந்துறையாடல் இடம்பெற்றது.  நாட்டில் காணப்படும் தொற்றுநோய் நிலைமைகளின் போது இலங்கை மக்களைப் பாதுகாப்பதில் கொரிய குடியரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் உறவுகளை மேலும் பலப்படுத்துவதே பாதுகாப்புச் செயலாளருடனான இந்த சந்திப்பின் மூலம் எதிர்ப்பார்ப்பதாக தென் கொரிய தூதவர் தெரிவித்த அதேசமயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் இதன்போது  உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார கலந்து கொண்டார்.

மேலும் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.