கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தினால் நாட்டின் இலவச கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது

ஜூலை 23, 2021

டிலான் ஜயதிலக

  •    விரிவுரையாளர்களில் 90% சிவில் விரிவுரையாளர்கள்,
  •     கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் எந்த தனியார் நிறுவனங்களும் இணைக்கப்படவில்லை
  •     பல்கலைக்கழக நுழைவுக்கான முன்நிபந்தனைகளை பூர்த்தி செய்தோருக்கே அணுமதி
  •     எதிர்காலத்தில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பை வளப்படுத்துவதற்கான ஆழமான அமைப்பு
  •     ஏனைய பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின்  அதிகாரங்களை மீறும்  ஒரு அமைப்பாக இருக்காது

 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் 90% சிவில் விரிவுரையாளர்கள், எனவே, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக புதிய சட்ட மூலத்தினால் நாட்டின் இலவச கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)  நேற்று (ஜூலை 22).
தெரிவித்தார்.   

உயர்தரப் பரீட்சையின் பின்னர் உயர்கல்வி வசதி வாய்ப்புக்களை இழக்கும் புத்திசாலித்தனமான மாணவர்களுக்கு உயர் கல்வியைத் தொடர்வதே இதன் பின்னணியில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்காக தலைமைத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சட்டபூர்வமான மற்றும் ஒழுக்கமான தலைமுறையை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கம் என தெரிவித்த ஜெனரல் குணரத்ன,   "சிறந்த கல்வி தரம் பேணப்படுவதால் குறைந்த கல்வி தகைமை கொண்ட செல்வாக்குமிக்கவர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் எந்தவிதமான ஒப்புதலும் இல்லை என அவர் விளக்கமளித்தார்.

வரைவு செய்யப்பட்ட கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக புதிய சட்ட மூலம், நாட்டில் உயர்கல்வித் தரங்களை அழிக்கக் கோரப்படவில்லை, இது நாட்டின் புத்திஜீவிகளால் தயாரிக்கப்பட்டது என அவர் வலியுறுத்தினார்.

இது போன்ற இயல்புடைய பல்கலைக்கழகம் உலகில் இது மாத்திரம் அல்ல  இதுபோன்ற பல பல்கலைக்கழகங்கள் பல உலகில் காணப்படுகின்றன என தெரிவித்த  பாதுகாப்பு செயலாளர், “இராணுவம் மற்றும் பொலிஸ் அகெடமிகளைத் தவிர வேறு எந்த தனியார் நிறுவனங்களும் இதனுடன் உள்வாங்கப்படவில்லை” என கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  இணைய தொழில்நுட்ப  காணொளி மூலமான  ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  பாதுகாப்பு செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த இணைய தொழில்நுட்ப காணொளி மூலமான ஊடக சந்திப்பில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் கல்வியல் பிரிவுக்கான பிரதி உபவேந்தர் பேராசிரியர் கேஏஎஸ் தம்மிக ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தரநிலை தொடர்பாக பதிலளித்த  பாதுகாப்பு செயலாளர், "பதிவுசெய்யப்பட்ட 210 அறிஞர்களில் 10 தத்துவவியல் (பிஎச்டி) பட்டங்கள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார் என அவர் ஞாபகம் ஊட்டினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தற்போதைய அமைப்பு தொடர்பாக  விரிவாக விளக்கமளித்த ஜெனரல் குணரத்ன, “கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 136 தத்துவவியலாளர்கள் (பிஎச்டி படிப்பை பூர்த்தி செய்தோர் ), 73 முதுமானி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 267 புகழ்பெற்ற வருகை விரிவுரையாளர்கள் என அதன் கல்வி ஊழியர்களாகக் கொண்டுள்ளது, எனினும் ஆயுதப்படைகளில் இருந்து இணைக்கப்பட்ட 24 விரிவுரையாளர்களே இங்கு கடமையாற்றுகின்றனர்". என குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக நுழைவுக்கான முன்நிபந்தனைகளை பூர்த்தி செய்த மாணவர்கள் மட்டுமே பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக இணைக்கப்படுவர் என்றார்.

இராணுவமயமாக்குதல் எனும் சொல்லாடல்களுக்கு பதிலளித்த அவர் "இது முற்றிலும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படவில்லை", கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  தற்போதைய பிரதி  துணைவேந்தர் (கல்வி) பேராசிரியர் கே.ஏ.எஸ். தம்மிக தொடர்பாக குறிப்பிட்டார்.

'பகல் நேர கற்கையாளர்களை '  'இராணுவ கேடட் அதிகாரிகளுடன்'  ஒரே இடத்தில் சேர்த்தல் குறித்த கேள்விகளை எழுப்புவது சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறிய துணைவேந்தர்: "மாணவர்கள் மத்தியில் இந்த கூட்டு சூழ்நிலை சிவில்-இராணுவ ஒத்துழைப்புக்கான ஆழமான அமைப்பை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டார்.

"2012 ஆம் ஆண்டில்" பகல் நேர கற்கையாளர்கள்" அனுமதிக்கப்பட்டதன் மூலம், மாணவர்களிடையே கல்வியைத் தொடர்வதில் ஒரு ஆக்கபூர்வமான போட்டித் தன்மைக்கு  வழி வகுக்கப்பட்டது" என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "பகல் நேர கற்கையாளர்கள் இராணுவ அதிகாரிகளின் அதே விரிவுரை அரங்குகளிலும் படிக்கின்றனர், ஆனால் அவர்கள் இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதில்லை", அத்தோடு  'பகல் நேர கற்கையாளர்களின்' மென் திறன்கள், இசையில் திறமைகள், தலைமைத்துவ குணங்கள், டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகள்,  விளையாட்டு போன்றவை அவற்றின் எதிர்காலத்தை வடிவமைக்க அத்தியாவசியமான கூறுகள் என குறிப்பிட்டார்.

2012 முதல் ‘பகல்நேர கற்கையாளர்கள் ’ மற்றும் ‘இராணுவ மாணவர்கள்’ இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்று துணைவேந்தர் வலியுறுத்தினார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அகெடமி  1981 ஆம் ஆண்டின் 68வது நாடாளுமன்ற கட்டளைச்  சட்டத்தால் நிறுவப்பட்டது மற்றும் 1988 ஆம் ஆண்டு  27 ஆம்  இலக்க திருத்தச்சட்டத்தின் மூலம்  சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு  அகெடமிக்கு  பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது என மேஜர் ஜெனரல் பீரிஸ் நினைவு கூர்ந்தார்.

2007 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழ் இது 2007 ஆம் ஆண்டில் ஜெனரல் சேர் ஜோன்  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது என்றாலும், கட்டமைப்பு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

"வரைவு செய்யப்பட்ட புதிய சட்டமூலம்  'நிர்வாக சபை' என்பதற்கு பதிலாக அமைப்பை நிர்வகிக்கும் முயற்சியில் 'ஆளுநர் குழு ' வை கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டமைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது" என்று துணைவேந்தர் மேலும் கூறினார், இந்த கட்டமைப்பு  பீட சபை , செனட் சபை மற்றும் கவுன்சிலையும் புதியதாக இணைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

உயர்கல்வி நிர்வாகத் துறையின் அனுபவம் வாய்ந்த இரண்டு புத்திஜீவிகளுக்கு ஆளுநர் குழுவில் பதவிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இது மற்ற அரச பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க அல்லது பல்கலைக்கழக மானிய ஆணையத்தின்  அதிகாரங்களை மீறுவதற்கான ஒரு அமைப்பாக இருக்காது என தெரிவித்த மேஜர் ஜெனரல் பீரிஸ் இது ஒரு சரியான கட்டமைப்பைக் கொண்ட, உலக பல்கலைக்கழகங்களுக்கு இணையான பல்கலைக்கழகமாக  இருக்க வேண்டும் என்பதே இதன் கோரிக்கையாகும் என  மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன்  இணைந்த அனைத்து இராணுவ நிறுவனங்களும் இந்தச் சட்டத்தில் இணைக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

பல்வேறு பாராளுமன்ற சட்டங்களால் நிறுவப்பட்ட இதேபோன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன, சமுத்திர பல்கலைக்கழக சட்டம், தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம் மற்றும் புத்தஸ்ரவக பிக்கு பல்கலைக்கழக சட்டம் என்பவை அவைகளில்  சிலவாகும் என மேற்கோளிட்டுக் காட்டினார்.

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு  பல்கலைக்கழகம் சட்ட மூலமும்  அதே அமைப்பில் ஏற்றப்பட்டுள்ளது, குறிப்பாக, அந்த நிறுவனத்தை மட்டுமே நிர்வகிக்கும் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே என்று துணைவேந்தர் விளக்கினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், லண்டன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய உள்ளூர் மாணவர்களுக்கும் இங்கு பயிற்சி நெறியில் சேர வாய்ப்பு உள்ளது, இது இலங்கை உயர்தர பரிட்சைக்கு சமமான நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தரங்களை பூர்த்தி செய்வதற்கு நிகரானது.  வெளிநாட்டு மாணவர்கள் பதிவு செய்ய இதே போன்ற தகுதி தேவை  என்றார்.

இங்கு மாணவர் ஒன்றியம் எதுவும் இல்லை, அதற்கு பதிலாக அவர்கள் பல்வேறு சங்கங்களை உருவாக்கியுள்ளனர், மேலும் அவர் பதிலளித்தார்.

உலகளாவிய பல்கலைக்கழக விவரக்குறிப்புகளுடன் தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை சிறப்பித்துக் காட்டிய அவர், “அரச உயர் கல்வி நிர்வாகத் துறையில் முன்பு நிகழ்த்திய புகழ்பெற்ற பேராசிரியர் தலைமையில் ஒரு‘ தர உத்தரவாத மையம் ’இங்கு செயல்படுகிறது.

ஊடகங்களுக்கு பதிலளித்த பேராசிரியர் கே.ஏ.எஸ். தம்மிக, மேலே விவாதிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தவிர, இந்த பல்கலைக்கழகம் குறிப்பாக தொழில்கள் சார்ந்த கல்வியைப் பின்பற்றுகிறது மற்றும் குற்றவியல் நீதி பீடம் அவற்றில் ஒன்றாகும் என தெரிவித்தார்.

எனவே, இது மற்ற தொடர்புடைய பல்கலைக்கழகங்களை விட அதிகாரமிக்கதாக மாறாது, அதற்கு பதிலாக அவற்றோடு ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.