கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
ஜூலை 26, 2021மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவமழை நிலைமை காரணமாகவே கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று மதியம் 1.00 மணிக்கு வழங்கப்பட்ட வலுவான ஆலோசனை (ஜூலை 26) அடுத்த 24 மணிநேரங்களுக்கு செல்லுபடியாகும்.