கடலோர பாதுகாப்பு படையினரால் 108 கடல் ஆமைகள் கடலுக்குள் விடுவிக்கப்பட்டன
ஜூலை 28, 2021இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடல் ஆமைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 108 கடல் ஆமைக் குஞ்சுகளை அண்மையில் கடலுக்குள் விடுவித்தது.
இதற்கமைய, கடலோர பாதுகாப்பு படை ரோஹன தளத்தில் பராமரிப்பின் மிரிஸ்ஸவில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளிலிருந்து பிறந்த கடல் ஆமை குஞ்சுகள் மிரிஸ்ஸ கடற்கரையில் விடுவிக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்கவின் உத்தரவின் பேரில் கழிவுப்பொருள் இல்லாத பகுதியை கடற்பரப்பில் நிர்வகித்து ஆமைகள் முட்டையிடுவதற்கான சூழல் தொகுதி உருவாக்கப்பட்டது.
கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான திட்டத்திற்கு இணங்க, ஆமை முட்டைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலோ அல்லது அருகிலுள்ள பொருத்தமான இடங்களிலோ பாதுகாக்க அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பாதுகாப்பை உறுதிசெய்ததாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கடல் ஆமைகளைப் பாதுகாத்தல் கடலோர பாதுகாப்பு படையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற மோசமான கப்பலில் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தொடர்ந்து கடல் சூழலை மீட்டெடுப்பதற்கான சாதகமான அறிகுறியாக ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடுவிக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்புப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.