கிளிநொச்சியில் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு

ஜூலை 28, 2021

கிளிநொச்சி பிராந்தியத்தில் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, இப்பிராந்திய பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டன.

இதற்கமைய இவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகளும் கிளிநொச்சி, முக்கம்பன் பகுதியில் வசிக்கும் திரு. உதயசூரியன் ஸ்கந்தபுரத்தில் பகுதியில் வசிக்கும் திரு. ஜோசப் கமலேஸ் பெர்னாண்டோ ஆகியோருக்கு கையளிக்கப்பட்டன.

மேலும் இந்த இரண்டு குடும்பங்களும் அத்தியாவசிய பொருட்கள் விதிகள் மற்றும் வீட்டுப் பாவைனை பொருட்களும் நன்கொடை வழங்கிவைக்கப்பட்டன,

புதிய வீடுகள், புரவலர்களின் நிதி அனுசரணையுடன் , கிளிநொச்சி பாதுகாப்பு படைதலைமையகத்தின் கீழ் உள்ள 20வது விஜயபாகு காலாட்படை படையணி மற்றும் 20ஆவது இலேசாயுத காலாட்படை படையணி ஆகியவற்றின் மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் கொண்டு நிர்மாணிக்கப்பட்டன.


கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு ஏற்ப இடம்பெற்ற இந்த நிகழ்வில் புதுமனை குடிபுகும் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.