கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மின்னிதழ் வெளியீடு

ஜூலை 29, 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல்லொழுக்காற்று கற்கைகளின் மின்இதழ் (Journal of Multi disciplinary Studies ) வெளியீடு  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் நேற்றைய தினம் (ஜூலை, 28) உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல்லொழுக்காற்று கற்கைகளின் மின்இதழானது ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழாகும். இது பல்லொழுக்காற்று மற்றும் இடைநிலையொழுக்காற்று அணுகுமுறைகளின் முதன்மை ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு துறைகளின் அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் திறந்து வைக்கின்றதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னிதழ் தொகுதி 3 வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட அதே வேளை,  அதன் அச்சுப்பதிப்பு தலைமை ஆசிரியர் சிரேஷ்டபேராசிரியர் ஸ்வர்னா பியசிரியிடம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தரினால் கையளிக்கப்பட்டதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில்  பட்டதாரி கற்கைகளுக்கான பீடாதிபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ மற்றும் பீடத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.