இராணுவத்தின் பங்களிப்புடன் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு

ஜூன் 25, 2019

வவுனியா மாவட்டத்தின் பரனகம வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் தேவை கருதி அப்பாடசாலைக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் இலங்கை இராணுவத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்டது. செலான் வங்கியின் கூட்டுறவு சமூக பொறுப்பு திட்ட நிதி உதவியுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினரலால் குறித்த தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் (ஜூன், 19 ) இடம்பெற்ற நிகழ்வின்போது ஒரு புதிய கணினி, திரையுடனான ஒரு மல்டிமீடியா புரொஜெக்டர் மற்றும் ஆறு யூ பீ எஸ் உபகரணங்கள் என்பன இப்பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பாடசாலை மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக இதற்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த வங்கியினால் 15 கணினிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.