டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இராணுவப் போர் வீரர்கள்

ஜூலை 31, 2021

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் - 2021 இல் முதலாம் இலக்க சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இலங்கையின் மாற்றுத்திறனாளி வீரர் சார்ஜென்ட் டி.எச்.ஆர் தர்மசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்த பின்னர் அவர் சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட ஆரம்பித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஆசிய பாரா விளையாட்டுகள், மலேசிய லாபுவான் திறந்த சக்கர நாற்காலி டென்னிஸ் சாம்பியன்ஷிப் மற்றும் மலேசியா, கோலாலம்பூர் திறந்த ஒற்றை ஆட்டம் -2018 சம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார் எனவும் சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸில் தரப்படுத்தலில் 62 வது இடத்தில் உள்ளார் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.