இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை- வளிமண்டலவியல் திணைக்களம்
ஆகஸ்ட் 03, 2021அந்தமான் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரையை அண்மித்து வாழும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்த படுவதாகவும் இது தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் பொதுமக்களுக்கு அவைகள் உடனடியாக அறியத்தரப்படும் எனவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|