சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பன தரிசிப்புக்காக இன்று முதல் கங்காராமவில் காட்சிக்கு
ஆகஸ்ட் 05, 2021மகா சங்கத்தினரின் மத ஆசிர்வாதங்களுடன் சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம் ' என்பன பொதுமக்கள் வழிபாட்டிற்காக கொழும்பு, கங்காராம விஹாரையில் இன்று (ஆகஸ்ட், 05) வைக்கப்பட்டது.
சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம் ' என்பவற்றை ஏந்திய வாகன பவனி பெளத்த சமய சம்பிரதாயங்களுடன் சுபவேளையில் கங்காராம விஹாரையை வந்தடைந்தது.
இதன் போது ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையின் பிரதம விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரினால் சமய அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டது.
‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பன பொதுமக்கள் தரிசித்து வழிபடுவதற்காக கொழும்பு, கங்காராம விஹாரையில் இன்று முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கங்காராமை விஹாரையில் ஆரம்பமான இந்த சமய ஊர்வலம் 18 மாவட்டங்களை ஊடறுத்து சுமார் 47 நாட்கள் நாடு முழுவதும் வாகன பவனியாக கொண்டு செல்லப்படவுள்ளதுடன் பிரசித்தி பெற்ற 48 விஹாரைகளில் வணக்க, வழிபாடுகளுக்காக வைக்கப்படவுள்ளது.
மகத்துவமான இந்த திட்டத்தின் உந்து சக்தியாக செயற்பட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) புனிதமிகு இந்த இரு வஸ்துக்களுக்கும் மரியாதை வணக்கம் செலுத்தினார்.
சூடா மாணிக்கத்தை நன்கொடையாக வழங்கிய புகழ்பெற்ற தொழிலதிபரும் பக்தரும் புரவலருமான ஆர்தர் சேனாநாயக்கவும் கலந்துகொண்டு இதன்போது மரியாதை வணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்வில், வண. மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சுதந்த காரியப்பெரும மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.