இரத்த தானம் வழங்கும் நிகழ்வு படைவீரர்களினால் முன்னெடுப்பு
ஆகஸ்ட் 06, 2021நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நேற்றையதினம் (ஆகஸ்ட் 05) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரணவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் நோக்கில், 11வது பிரிவு, பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் படை முகாம்களில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் கண்டி திரித்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
குறித்த இரத்ததான முகாம், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகொடுவவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கண்டி திரித்துவ கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.