சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கமும் கோபுரமும் பொதுமக்கள் வழிபாட்டிற்காக நளை கொரதோட்ட ரஜமஹா விஹாரையில்

ஆகஸ்ட் 09, 2021

சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி நேற்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ராஜமஹா விஹாரையை வந்தடைந்தது.

இந்த புனித வஸ்துக்கள் இன்றைய தினம்  (ஓகஸ்ட், 09) பொதுமக்களின் தரிசிப்பு மற்றும் வழிபாட்டுக்காக பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த புனித வஸ்துக்கள் நாளைய தினம்  (ஓகஸ்ட், 10) இந்த வாகன பவனியின் 3ம் நாள் இலக்கான கொரதோட்ட ரஜமஹா விஹாரயை சென்றடையவுள்ளது.

இதற்கமைய, நாளைய  பவனியில், போகந்தர, பிலியந்தலை, பொல்கஸோவிட்ட, கொட்டாவ, மஹரகம, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், எகொடவத்த, ரத்தன்பிட்டிய, திவுல்பிட்டிய வடக்கு, நுகேகொட, நுகேகொட புகையிரத நிலையம், நாவல, கொஸ்வத்தை, ராஜகிரிய, அகுரேகொட, அரங்கல, பொரலுகொட, அதுருகிரிய, கடுவெல வீதி மற்றும் ஒருவெல வீதி ஊடாக  பயணித்து  கொரதோட்ட ரஜமஹா விஹாரயை சென்றடையவுள்ளது.