இராணுவத்தினரால் வைத்தியசாலைக்கு ஒக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கிவைப்பு

ஆகஸ்ட் 14, 2021

அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியாசாலை, ராகம போதனா வைத்தியசாலை மற்றும் கம்பஹா ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு 16 ஒக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் இராணுவத்தினரால் நேற்று (ஓகஸ்ட்,13) வழங்கிவைக்கப்பட்டது.

இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகளை இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஓ.எம்.டி குணசிங்க குறித்த மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.