சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் நா உயன ஆரண்யவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது
ஆகஸ்ட் 15, 2021கட்டுவன ஸ்ரீ மஹிந்த பிரிவெனவில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஓகஸ்ட், 15) பிரிவெனாவிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.
இதற்கமைய, இந்த புனித பொருட்களை ஏந்திய வாகன பவனி இப்பாகமுவ, இப்பலாவ, கொகரெல்ல, அம்பன் பொல மற்றும் மெல்சிறிபுர வரை பயணித்து நா உயன ஆரண்யவை இன்று மாலை சென்றடையவுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பன இன்று மாலை பொதுமக்கள் வழிபடுபதற்காக நா உயன ஆரண்யவில் வைக்கப்படவுள்ளது.
புனித வஸ்த்துக்கள் ஏந்திய இந்த வாகன பவனி வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் இடம்பெறுகின்றன.
மேலும், இந்த வாகன பவனியின் போது போக்குவரத்தினை கையாளும் நடவடிக்கை அந்ததந்த பிரதேசத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த பவனியின்போது மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.