இந்தியாவிலிருந்து மருத்துவ ஒக்ஸிஜனைக் கொண்டுவர கடற்படைக் கப்பல் ஷக்தி பயணம்

ஆகஸ்ட் 17, 2021

இலங்கைக்கு மருத்துவ தர ஒக்ஸிஜனைக் கொண்டுவர இந்தியாவின் சென்னை துறைமுகத்தை நோக்கி கடற்படைக்கப்பல் ஷக்தி இன்று (ஆகஸ்ட் 17) காலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இலங்கைக்கு மருத்துவ தர ஒக்ஸிஜனைக் கொண்டு வரும்போது துறைமுகங்களில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து விநியோகத்தினை விரைவுபடுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படைத் தளபதிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ தர ஒக்ஸிஜனின் கையிருப்பை பராமரிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.