அயகமவிலிருந்து கலவானவிற்கு செல்லும் பாதை இராணுவத்தினரால் புணரமைப்பு

ஆகஸ்ட் 18, 2021

அரசாங்கத்தின் 100,000 கிலோமீற்று மாற்று கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அயகமவிலிருந்து கலவான வரையான 16.5 கிலோமீட்டர் நீள பாதையை புணரமைப்பு செய்யும் பணியை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ பொறியியலாளர் படையணியின் 12வதுகளப் பொறியாளர் படைப்பிரிவு இந்த புணரமைப்பு பணிகளளை முன்னெடுத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

209 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்ட இந்த வீதி அபிவிருத்தி திட்டம் ஆகஸ்ட் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது.  இரண்டு கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ள இந்த திட்டம், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியன் ‘கம சமக பிலிசந்தரக்’ எனும் திட்டத்திற்கு அமைய போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கிய பொதுமக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் புணரமைப்பு மற்று திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.