பெரும்போக நெற் செய்கைக்காக 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளை இராணுவத்தினரால் உற்பத்தி

ஆகஸ்ட் 20, 2021

2021 பெரும்போக நெற்செய்கைக்காக தேவைப்படும் சுமார் 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை இராணுவத்தினர் உற்பத்தி செய்யவுள்ளனர்.

இதுவரை சுமார் 1000 மெற்றிக் தொன் சேதனப் பசளை தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் சேதன பசளைப் பயன்பாடு எண்ணக்கருவுக்கு அமைய, சேதன பசளை உற்பத்தி செயல்முறையை அதிகரிக்கும் நோக்கில், இராணுவத்தின்  விவசாய மற்றும் பண்னை உற்பத்தி பணிப்பகத்தின்  வழிகாட்டுதலின் கீழ்  கிழக்கு  பாதுகாப்பு படை தலைமையகத்தின் இராணுவ பிரிவுகள் சேதனப் பசளை உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டம் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின்  'துரு மிதுரு நவ ரடக்' எனும் இராணுவ பசுமை திட்ட எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.