சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று பாணந்துரை ரங்கொத் விஹாரையை சென்றடையும்

ஆகஸ்ட் 20, 2021

சந்தஹிருசேய தூபியின்  புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்றையதினம்   (ஓகஸ்ட், 20)  பாணந்துரை ரங்கொத் விஹாரையை சென்றடையவுள்ளது.

இதற்கமைய, ஹொரண குருந்துவத்த மஹா  விஹாரையில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட சந்தஹிருசேய தூபியின்  சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி, கோனபொல, கஹதுடுவ, கெஸ்பேவ மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களை கடந்து இன்று மாலை  பாணந்துரை ரங்கொத்  விஹாரையை சென்றடையவுள்ளது.

புனித வஸ்த்துக்கள் ஏந்திய இந்த வாகன பவனி வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும்  இடம்பெறுகின்றன.

இந்த வாகண பவனியின்போது கடுமையான சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.