சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் சமய கிரிகைகளுக்காக களுத்துறை போதி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 21, 2021

பெளத்த சமய அனுஷ்டானங்களுக்காக கடந்த சில நாட்களாக நாட்டின் சில பாகங்களிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சந்தஹிருசேய தூபியின்  சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி,  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த புனித வஸ்த்துக்களுக்கு வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரினால் பெளத்த சமய கிரிகைகள் நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.