கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செவி, மூக்கு, தொண்டை சிகிச்சைப்பிரிவு அண்மையில் கோக்லியர் இம்ப்லாண்டேஷன் திட்டத்தை தொடங்கியது.
ஆகஸ்ட் 24, 2021அதன்படி, அவர்கள் ஒரு வருடமும் ஒன்பது மாதங்களுமான இயற்கையாகவே காது கேளாத குழந்தைக்கு முதல் கோக்லியர் உள்வைப்பு சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
இந்த சத்திர சிகிச்சைக்கக சுகாதார அமைச்சு கோக்லியர் இம்ப்லாண்ட் கருவியை வழங்கிய அதே வேளை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை அதை கட்டணமின்றி பொருத்தியதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோக்லியர் உள்வைப்பு சத்திர சிகிச்சை பல்வேறு காரணங்களால் ஆழ்ந்த செவிப்புலன் இழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காது கேட்கும் திறனை மீட்டெடுக்க உதவுகிறது.
கோக்லியர் இம்ப்லாண்டேஷன் திட்டத்தின் தொடக்கமானது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை செவி, மூக்கு, தொண்டை துறையில் ஒரு மைல்கல் சாதனை என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செவி, மூக்கு, தொண்டை சிகிச்சைப்பிரிவு தலைமை வைத்திய அதிகாரி செவி, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் வசந்திகா எஸ் துடுவகே எடுத்துரைத்தாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொரெல்ல லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் செவி, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ADKSN யசவர்தன மற்றும் அபேக்ஷா வைத்தியசாலையின் ஆலோசகர் செவி, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் துமிந்தா துமிகோராச்சி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிக்கரம் நீட்டினார்கள்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நிர்வாகப் பணிப்பாளர் வைத்தியர் ஜெயன் மென்டிஸ், மருத்துவ சேவை பணிப்பாளர் பிரிகேடியர் PS திலகரத்ன மற்றும் நிர்வாக பணிப்பாளர் கேர்ணல் EMGHJB தெஹிதெனிய ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tamil