1377 கிலோ உலர்ந்த மஞ்சளை கப்பறபடையினரால் கைப்பற்றப்பட்டது
ஆகஸ்ட் 26, 2021மன்னார் அரிப்பு கடற்கரையிலும் கல்பிட்டி கடனீரேரி பகுதியிலும் 2021 ஓகஸ்ட் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 1377 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
இதற்கமைய, அரிப்பு கடற்பரப்பில் வடமேற்கு கடற்படை கட்டளையக கடற்படை வீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்களால் கடற்கரையில் கைவிடப்பட்ட 11 சாக்குகளில் காணப்பட்ட சுமார் 449 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, வட மத்திய கடற்படை கட்டளையக கடற்படை வீரர்களினால், 2021 ஆகஸ்ட் 23ம் திகதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, அரிப்பு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் சுமார் 428 கிலோ மற்றும் 400 கிராம் உலர்ந்த மஞ்சள் நிரப்பப்பட்ட 14 சாக்குகளை கைப்பற்றினர்.
மேலும், கடற்பரப்பில் வடமேற்கு கடற்படை கட்டளையக கடற்படை வீரர்களினால் ஓகஸ்ட்,22ம் திகதி இப்பன்தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 02 படகுகளில் இருந்து 15 சாக்குகளில் பொதி செய்யப்பட்டிரிந்த சுமார் 500 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.