விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு கையளிப்பு

ஆகஸ்ட் 29, 2021

இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக, விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (28,ஓகஸ்ட்) கையளிக்கப்பட்டன.

இந்த உபகரணங்கள் அனுராதபுர விமானப்படை தளத்தின் பதில் கட்டளை தளபதியும், பதவிநிலை சேவைகள் கட்டளை அதிகாரியுமான குரூப் கெப்டன் என் சபுகஸ்தென்னவினால் விஷேட வைத்தியர் அனுரங்க சேனாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கென இந்த ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை விமானப்படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், விமானப்படை வீரர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.