பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூன் 24, 2019

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் மேஜர் ஜெனரல் டீஏபிஎன் தெமடன்பிட்டிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஜுன், 24) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.