கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் சிகிச்சைக்காக விபஸ்ஸனா தியான நிலையம் இடைநிலை பராமரிப்பு மையமாக மற்றம்

ஆகஸ்ட் 31, 2021

கொழும்பில் உள்ள சர்வதேச விபஸ்ஸனா தியான நிலையம் கொவிட்-19 பாதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் சிகிச்சைக்காக முதல் இடைநிலை பராமரிப்பு மையம் இலங்கை இராணுவத்தினரால் நேற்றைய தினம் (ஓகஸ்ட், 30)  ஸ்தாபிக்கப்பட்டது.

இடைநிலை பராமரிப்பு மையத்தில், மருத்துவ உபகரணங்கள், மருந்து சேமிப்பகம் மற்றும் இதர  வசதிகள் உட்பட தொற்றுக்குள்ளான 84 தேரர்ர்களுக்கு  சிகிச்சையளிப்பதற்காக  45 அறைகள் என்பன காணப்படுவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு பாதுகாப்புப் படை மற்றும் 14வது படைப்பிரிவு படைவீரர்களினால்  லொஜிஸ்டிக் பிரிவுகளின் ஒத்துழைப்புடன்  இந்த திட்டத்தை நிறைவு செய்யப்பட்டன.

கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள சர்வதேச விபஸ்ஸன தியான நிலையம், வேஉட தொடந்தலவ தம்மகிரி மடாலயத்தின் தலைவர் வண. உடுதும்பர காஷ்யப தேரரினால் சமய நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. 'ஜயமக பிலிசரண' கருத்திட்ட ஒருங்கிணைப்பு பணிப்பாளருடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில்  பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவ தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.