பாதுகாப்பு செயலாளர் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருடன் சந்திப்பு

செப்டம்பர் 02, 2021

அண்மையில் (ஆகஸ்ட் 26) ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பிளாட்டோனோவிச் பத்ருஷேவை சந்தித்தார்.

இரு நாடுகளினதும் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே இடம்பெற்ற இந்த சந்திப்பில், பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பபட்டன.

மேலும் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையில் நிகழும் நிலவும் உறவுகளை மேலும் வலுப்படுத்த இருநாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் உறுதி பூண்டனர்.

அத்துடன் இரு நாட்டு அரசு மற்றும் மக்களுக்கு இடையில் நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் குணரத்ன, இருதரப்பு உறவுகளின் பின்னணியில் இலங்கைக்கு அளிக்கப்பட்ட ஒத்துழைப்புக்கு ரஷ்ய அரசிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்பு அதிதிகள் குழுவில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ உதவியாளர் கேர்ணல் விஜயனாத் ஜெயவீர ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த சந்திப்பில் ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குருப்கெப்டன் தம்மிக டயஸும் கலந்து கொண்டார்.