யாழில் மேலும் இரண்டு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கையளிப்பு

செப்டம்பர் 02, 2021

கொல்லங்கல்லடி மற்றும் உடுவில் தெற்குப் பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட  மேலும் இரண்டு புதிய வீடுகள் தேவையுடைய இரண்டு குடும்பங்களுக்கு  அன்மையில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் இணை அனுசரணையுடன் நிறைவு செய்யப்பட்ட இந்த திட்டத்திற்கு 10வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 9வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி வீரர்கள் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் மனிதவள பங்களிப்பை வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடுகளின்  பயனாளிகளான திருமதி ஜெனதாஸ் அனுஸ்ரா மற்றும் திருமதி ராஜ்குமார் தட்சஜினி ஆகியோருக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்குவினால் இருவேறு வைபவத்தின் போது அந்தந்த வீடுகளின் சாவி கையளிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி  எளிமையான முறையில் இடம்பெற்ற  புதுமனை புகு விழாவில் இரண்டு புதிய வீடுகளின் பயனாளிகளுக்கும்  அவசியமான உலர் உணவுப் பொருட்கள் மற்றும்  அத்தியாவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.